Spotlightசினிமாவிமர்சனங்கள்

பாபா பிளாக்‌ஷீப் – விமர்சனம் 3/5

ணையத்தில் தன் வசிகரீக்கும் தமிழ் பேச்சால் பலரையும் கவர்ந்த ராஜ் மோகன், தனது முதல் இயக்கமாக இயக்கியிருக்கும் திரைப்படம் தான் “பாபா பிளாக்‌ஷீப்”.

இப்படத்தில், ஆர்.ஜே.விக்னேஷ், நரேந்திர பிரசாத், அப்துல் அயாஸ், சேட்டை ஷெரீஃப், உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும், விருமாண்டி அபிராமி, அம்மு அபிராமி, வினோதினி, போஸ் வெங்கட், சுப்பு பஞ்சு, ஜி.பி.முத்து உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

சுரேஷ் சக்ரவர்த்திக்கு பாய்ஸ் ஸ்கூல் மற்றும் கோ-எட் ஸ்கூல் என்று இரு பள்ளிகள் உள்ளன. ஒரே காம்பவுண்டில் இருக்கும் இந்த இரு பள்ளிகளில் ஒரு சில சேட்டை பிடித்த மாணவர்கள் உள்ளனர்.

சுரேஷ் சக்ரவர்த்தி இறந்ததும், இரண்டு பள்ளியையும் ஒரே பள்ளியாக்கிவிடுகின்றனர் அவரது மகன்கள். இதனால், பாய்ஸ் ஸ்கூல் படிக்கும் மாணவர்களும், கோ – எட் பள்ளி படிக்கும் மாணவ மாணவிகளும் ஒரே பள்ளியில் இணைகின்றனர்…

இதனால், இரு பள்ளி மாணவர்களிடத்திலும் சேட்டை பிடித்த மாணவர்களிடம் சண்டை, சச்சரவு எழுகிறது. கடைசி பெஞ்ச் இடத்திற்கு இரு பள்ளி மாணவர்களிடையேயும் அடிக்கடி சண்டை வருகிறது.

ஒருகட்டத்தில் இருவரும் ஒன்று சேர, அச்சமயத்தில், பள்ளி வளாகத்தில் தற்கொலை கடிதம் ஒன்று கையில் சிக்குகிறது. அக்கடிதத்தை யார் எழுதியது.? எதற்காக எழுதினார்..? என்று இவர்கள் கண்டுபிடிப்பதே படத்தின் மீதிக் கதை.

நாயர்களான நரேந்திர பிரசாத் மற்றும் அப்துல் அயாஸ் இருவரும் பொருத்தமான கதாபாத்திரங்களாக படத்தில் தோன்றியிருக்கின்றனர். அனுபவ நடிப்பு போன்று காட்சிகளுக்கு காட்சி தங்களது நடிப்பை அதிகரித்துக் கொண்டே இருந்தனர்.

கண்களால் ரசிகர்களை சுண்டி இழுத்திருக்கிறார் அம்மு அபிராமி. நடிப்பில் டோஸ் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

ஆர் ஜே விக்னேஷின் காட்சிகள் செயற்கைத்தனமாக இருந்தது படத்திற்கு மிகப்பெரும் சரிவு. இவரின் கதாபாத்திரம் படத்தோடு ஒட்டாமலும், எந்த இடத்திலும் சிரிப்பை வரவைக்காமலும் இருந்ததால் படத்தின் ஓட்டத்திற்கு பெரும் தடைக்கல்லாகவே இருந்தது.

முதல் பாதி எனோதானோவென்று சென்று கொண்டிருக்கும் கதையானது இரண்டாம் பாதியில் பாதிக்கு மேல் தான் களத்திற்குச் செல்கிறது. இரண்டாம் பாதியின் பாதிக்கு மேல் இருந்த கவனத்தை முதல் பாதியிலும் எடுத்து வந்திருக்கலாம்.

இருந்தாலும் பெற்றோர்கள் மாணவர்களிடத்திலும், மாணவர்கள் பெற்றோரிடத்திலும் எதிர்பார்க்கும் விஷயம் என்ன.? அவர்களை எப்படி கையாளவேண்டும்.? என்று கூறிய விஷயத்தில் பெரிதாகவே இயக்குனரை பாராட்டலாம்.

பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது.

ஒளிப்பதிவிலும் பெரிதாக குறை கூற ஏதுமில்லை.

சொல்லவந்ததை இன்னும் அழுத்தமாகவும் பலமாகவும் கூறியிருந்திருக்கலாம்.

பாபா பிளாக்‌ஷீப் – இன்னும் கொஞ்சம் பார்த்து பண்ணியிருந்திருக்கலாம்…

Written & Directed By Rajmohan Arumugam

Dop : Sudarshan Srinivasan

Music : Santhosh Dhayanidhi

Designed By : Gopi Prasanna

Editor : Vijay Velukutty

Art director: Madhavan

Stunt: Vicky

Choreography : Azar

Costume Designer : ADORE Azhar

Promotional Concepts : KiranSa

Pro : Sathish – Siva ( AIM )

Produced By : Raahul, Romeo pictures

Facebook Comments

Related Articles

Back to top button