
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்க மிகவும் பிரம்மாண்டமாக் உருவாகி வரும் படம் தான் ’பிகில்’. இப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்து வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்கு நடுவில் ரசிகர்களுக்கு ஒரு பெரிய கேள்வி இருக்கிறது, அதாவது படத்தின் இசை வெளியீடு எப்போது என்பது தான். தற்போது என்னவென்றால் படத்தின் இசை வெளியீடு செப்டம்பர் முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரத்தில் நடைபெறும் எனவும், இசை வெளியீட்டினை சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடத்த படக்குழு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்தாலும் உண்மை செய்தி என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Facebook Comments





