Spotlightவிமர்சனங்கள்

பெண் ஒன்று கண்டேன் – விமர்சனம்

தையின் நாயகன், கல்லூரியில் வைத்திருக்கும் அரியர் பேப்பரை முடிப்பதற்காக ஒரு வீட்டில் தங்கியிருக்கிறார். எழுதிய தேர்வில் தேர்ச்சி பெறாமல் போக, மன ழுத்தத்தில் இருக்கிறார் நாயகன்.

தனியாக இருக்கும் நாயகன், தனது வீட்டு ஜன்னல் வழியாக எதிர் வீட்டில் இருக்கு பெண் ஒருவரை தினம் தினம் பார்க்கிறார்.

அவரது அழகில் மயங்குகிறார் நாயகன். ஒருமுறை ‘தன்னை வந்து சந்திக்க வருமாறு’ அந்த பெண் நாயகனிடம் கூற, நாயகனோ அந்த பெண்ணை காண அவளது வீட்டிற்கு செல்கிறார்.

அதன்பிறகு அந்த வீட்டிற்குள் நடக்கும் மர்மமான சம்பவங்களே படத்தின் மீதிக் கதை..

படத்தின் நாயகன் விஷ்ணு விஜயன் மிகவும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மிகவும் சவாலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து தன் கண்களில் நிலைநிறுத்தியிருக்கிறார்.

நாயகி ஜனனி ரெங்கராஜ் மிகவும் அழகாக தனது மிரட்டலை வெளிப்படுத்தியிருக்கிறார். டயலாக் டெலிவரி, காதல், கோபம், என அனைத்திலும் ஸ்கோர் செய்துள்ளார்.

நிச்சயம் ஜனனி கோலிவுட்டில் ஒரு ரவுண்ட் அடிப்பார்.

அழகான கதையை மிகவும் நேர்த்தியாக நகர்த்தி சென்றிருக்கிறார் இயக்குனர் மகேஷ் முத்துராஜ்.

ராஜ்குமாரின் ஒளிப்பதிவு பலம், ஆதித்யா ரவீந்திரனின் பின்னனி இசை கதையோடு பயணம் புரிய வைத்தது.

பெண் ஒன்று கண்டேன் – மிரட்டல்…

Facebook Comments

Related Articles

Back to top button