
தர்பார் படத்தை முடித்துவிட்டு தற்போது சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இமான் இசையைமத்து வருகிறார்.
இதில் ரஜினியுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இதன் சூட்டிங்கை தற்போது ஹைதராபாத்தில் நடத்தி வருகிறார் சிவா.
இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. தற்காலிகமாக தலைவர் 168 என்று அழைத்து வருகின்றனர்.
ரஜினி படங்கள் என்றாலே படத்தின் தலைப்பை அறிவித்துவிட்டுதான் சூட்டிங்கை தொடங்குவார்கள்.
ஆனால் இந்த படத்தின் சூட்டிங் தொடங்கிய போதும் இதன் தலைப்பை அறிவிக்கவில்லை.
ஆனால் அஜித், விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன், கார்த்தி, சூர்யா உள்ளிட்ட பல ஹீரோக்களின் படங்கள் சூட்டிங் பாதி முடிந்த பின்தான் ஏதோ ரகசியம் போல டைட்டிலை பின்னர் அறிவிப்பார்கள்.
சிவா இயக்கிய அஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு நள்ளிரவு 3.40 மணிக்கு அறிவித்த கதையெல்லாம் இங்குண்டு.
எனவே எங்கள் தலைவர் வழி எதுவோ அதையே நீங்களும் பாலோ செய்யுங்கள். மற்ற ஹீரோக்களை போல எங்கள் ரஜினி படத்தலைப்பை தாமதம் செய்யாதீர்கள் என சிவாவுக்கு ரஜினி ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Rajini fans request to Siva in Thalaivar 168 title announcement





