Spotlightசினிமா

தடுமாறும் ப்ரொமோஷன் ; ’கஸ்டடி’க்காக கதறும் வெங்கட் பிரபு!

மாநாடு வெற்றி பெற்ற பிறகு வெங்கட் பிரபு அடுத்ததாக நாக சைதன்யா வைத்து “கஸ்டடி” என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படம் உருவாகி இருக்கிறது. வரும் 12 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது.

படத்தின் ட்ரெய்லர் வரும் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் மிகவும் மும்முரமாக இருந்து வருகிறார்கள் வெங்கட் பிரபுவும் நாக சைதன்யாவும்.

இதற்காக ப்ரொமோஷன் வீடியோவை அவ்வப்போது இருவரும் வெளியிட்டு வருகின்றனர்.

ஆனால், இந்த வீடியோவானது எதிர்பார்த்த அளவிற்கு பெரிதாக மக்களை சென்றடையவில்லை என்று கடும் அப்செட்டில் இருக்கிறாராம் வெங்கட் பிரபு..

அதுமட்டுமல்லாமல், இப்படத்தில் மற்றொரு பில்லராக நடித்திருக்கிறார் அரவிந்த்சாமி. ஆனால், அவரை எந்த இடத்திலும் இதுவரை ப்ரொமோட் செய்யவில்லை என்று அரவிந்த்சாமி ஒரு பக்கம் கடுப்பில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இளையராஜா இருவரும் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்கள்.

Facebook Comments

Related Articles

Back to top button