Spotlightசினிமா

ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ”காத்துவாக்குல ரெண்டு காதல்” டீசர்!!

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் வழங்க, இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா,சமந்தா என நட்சத்திர கூட்டணி இணைந்து நடித்திருக்கும் படம் “காத்து வாக்குல ரெண்டு காதல்”.

‘நானும் ரௌடி தான்’ படத்திற்கு பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவன் மீண்டும் ரொமாண்டிக் காமெடி ஜானரில் இப்படத்தை இயக்கியுள்ளார். இசையமைப்பாளார் அனிருத் இசையில் வெளியான மூன்று பாடல்களும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள இப்படத்தின் டீசர் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு, வைரலாகி வருகிறது.

படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில் போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் விக்னேஷ் சிவன். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க, S.R.கதிர் மற்றும் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஶ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். கலை இயக்கத்தை ஸ்வேதா செபாஸ்டியன் கவனிக்க, ஸ்டண்ட் பணிகளை திலீப் சுப்பராயன் செய்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ மற்றும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை, தயாரிப்பாளர் S.S. லலித்குமார் தயாரித்துள்ளார்.

இப்படம் வரும் 2022 ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button