
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘மாகாளி’ (Maakaali) திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அரவிந்த் எழுதி இயக்கி வரும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு திட்டமிட்டபடி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அடுத்தகட்ட படப்பிடிப்புக்கான பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
‘மாகாளி’ படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். ஸ்வாசிகா, அனிஷ்மா அனில்குமார், ஹரிஹரன், அஷ்வின் ராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் தொழில்நுட்பக் குழுவில் லெனின் பாரதி, பிரதீபன் செல்வரத்னம், எடிட்டர் செல்வா, ராமு தங்கராஜ், திலீப் சுப்பராயன், கபிலன் செல்லையா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் கதை மற்றும் கதாபாத்திரங்கள் குறித்த விவரங்களை படக்குழு இன்னும் முழுமையாக வெளியிடாததால், ‘மாகாளி’ என்ன மாதிரியான கதைக்களத்தில் உருவாகிறது? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.





