Spotlightசினிமா

சாதனை படைக்கும் விஜய் போட்ட ட்வீட்!

விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் வாரிசு படத்தின் இசைவெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை அன்று சென்னையில் நடைபெற்றது.

அப்போது, நடிகர் விஜய் ரசிகர்களுடன் செல்பி வீடியோ ஒன்று எடுத்துக் கொண்டார்.

#EnNenjilKudiyirukkum என்ற ஹேஷ்டேக்கை விஜய்யே மேடையில் வைத்து போடச் சொன்னது ரசிகர்களின் ஆரவாரத்தை எகிறச் செய்தது. அந்த செல்ஃபி வீடியோ விஜய்யின் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்ட ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கண்டிருந்தார்கள்.

தற்போது வரையில் 9 மில்லியன் பார்வைகளை பெற்றிருக்கிறது. அதாவது 90 லட்சத்துக்கும் அதிகமானோர் விஜய்யின் செல்ஃபி வீடியோவை கண்டிருக்கிறார்கள்.

இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால், விஜய்யின் இந்த ட்வீட் மட்டுமே பகிரப்பட்ட 39 நிமிடங்களிலேயே 1 லட்சம் லைக்ஸ்களை பெற்றிருக்கிறது என World Top Tweets என்ற அமைப்பு கண்காணித்து அறிவித்திருக்கிறது.

விஜய் ரசிகர்கள் இந்த மகிழ்வான தருணத்தை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

Facebook Comments

Related Articles

Back to top button