விமர்சனங்கள்

அனந்தா – விமர்சனம்

ஜெகபதிபாபு, நிழல்கள் ரவி, சுகாசினி, ஒய் ஜி மகேந்திரன், தலைவாசல் விஜய் உள்ளிட்ட நட்சத்திரங்களில் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா அவர்களின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தான் அனந்தா.

இப்படத்திற்கு தேவா இசையமைத்து இருக்கிறார். கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரித்திருக்கிறார். புட்டர்பத்தி சாய்பாபா அவர்களின் அற்புதங்களை சொல்லும் படைப்பாக இப்படம் உருவாகி இருக்கிறது.

கதைக்குள் பயணிக்கலாம்…

புட்டபர்த்தி ஆசிரமத்தில் இருந்து ஐந்து பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது 5 பக்தர்களும் ஆசிரமத்திற்கு வருகின்றனர். அவர்களை ஆசிரம நிர்வாகிகள் வரவேற்கின்றனர். அவர்கள் ஐந்து பேரும் தங்கள் வாழ்வில் சாய்பாபா அவர்கள் நிகழ்த்திய அற்புதங்களையும் கொடுத்த சந்தோஷத்தையும் அவர்களோடு பகிர்ந்து கொள்கின்றனர்.

அது என்னென்ன என்பதை படத்தின் கதை..

படத்தில் தோன்றிய நடிகர், நடிகைகள் அனைவருமே தங்களது  அனுபவ நடிப்பை அள்ளிக் கொடுத்திருகின்றனர். முழுக்க முழுக்க சாய்பாபா அவர்களின் மகிமைகளையும் அற்புதங்களையும் வெளிக் கொண்டு வந்திருக்கும் திரைப்படமாக இப்படம் உருவாகியிருக்கிறது.

தேவாவின் இசை படத்திற்கு மிகப்பெரும் பலமாக இருந்திருக்கிறது. ஒளிப்பதிவும் பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது.

சுஹாசினி, ஒய் ஜி மகேந்திரன் மற்றும் தலைவாசல் விஜய் உள்ளீட்ட நடிகர்களும் தங்களது நடிப்பை அளவாக கொடுத்திருக்கின்றனர். மேலும், திரைக்கதையை சுரேஷ் கிருஷ்ணா நகர்த்திக் கொண்டு சென்ற விதம் மிகவும் நேர்த்தியாக இருந்தது.

குறிப்பிட்ட மதத்தை மட்டும் குறிக்காமல், அனைவருக்கும் பொதுவான ஒரு கடவுளாக சாய் இருக்கிறார் என்பதை படம் வெளிச்சமாக காட்டியிருக்கிறது.

அனந்தா – சாய் பாபாவின் மகிமை

Facebook Comments

Related Articles

Back to top button