
இயக்குனர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன் இயக்கத்தில் சந்தோஷ் நம்பிராஜன், ரவீனா, விஜய் சத்யா உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் திரைக்கு வந்து பலராலும் பாராட்டப்பட்ட திரைப்படம் தான் “வட்டார வழக்கு”.
இப்படம் கடந்த டிசம்பர் மாதம் Tentkotta யூ டியூப் தளத்தில் வெளியானது. வெளியான குறைந்த நாட்களிலே இதுவரை சுமார் 5 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
இதனால், பெருமை கொண்ட நாயகன் சந்தோஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “ சினிமா என்பது ஒரு பயணம்… அந்த பயணத்தின் இறுதியில் மக்களின் மனதை அடைந்தால் தான் அது முழுமையான வெற்றி. இன்று ‘வட்டார வழக்கு’ Tentkotta OTT மற்றும் YouTube தளங்களில் 5 லட்சம் பார்வையாளர்களை கடந்து வெற்றியின் பக்கம் பயணிக்கிறது. இது ஒரு சாதாரண சாதனை அல்ல, பெரிய விளம்பர யுக்திகளின்றி, தூய்மையான படைப்பாக மக்களின் உள்ளம் தொடுவதன் விளைவு.
திரைப்படம் எடுப்பது என்பது ஒரு அர்ப்பணிப்பு. அது கடவுளுக்குப் படையல் சமர்ப்பிப்பதைப் போன்றது. அந்த படையலை கடவுள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது போல, நமது படமும் மக்களிடம் சென்று சேர வேண்டும். தமிழ் சினிமா சூழலில் நல்ல படங்கள் மக்களை அடைவது மிகப் பெரிய சவால். ஆனால் ‘வட்டார வழக்கு’ அந்த சவால்களை கடந்து மக்கள் வரை சென்றிருக்கிறது.
இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் – பார்வையாளர்கள்! அவர்களது ஆதரவு, YouTube-இல் வரும் கருத்துக்கள், பாராட்டுகள் எல்லாம் இந்தப் படத்தின் வெற்றிக்கான பிரதான அங்கிகாரம். இவ்வளவு பெரிய வெற்றியை எட்டிய இயக்குநர் ராமச்சந்திரன் Kannusamy Ramachandran, அவரின் அடுத்த படத்தில் இன்னும் வீரியமான படைப்பை உருவாக்குவார் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
இந்த வெற்றிக்குப் பின்னணியில் உறுதுணையாக இருந்த சக்தி ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் இணை தயாரிப்பாளர்கள் ஆஞ்சநேயா பிக்சர்ஸ், கே.எஸ்.கிச்சன் சங்கர், சுந்தரபாண்டியன், கணேசன் கண்ணுச்சாமி ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி!
மேலும், இசைஞானியின் இசையில் நடித்த அனுபவம் என்னுடைய வாழ்வில் மறக்க முடியாத பெருமையாகும். இனி வரும் காலங்களில், இன்னும் சிறப்பான படைப்புகளை மக்களுக்காக உருவாக்கிடவேண்டும்.
தொடரும் ஆதரவுக்கு நன்றி!
வாழ்க தமிழ் சினிமா!!” என்று கூறியுள்ளார்.




