
அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.
இவ்விழாவில் பேசிய விஜய்,
‘1. வாழ்க்கையில அவங்க மாதிரி இவங்க மாதிரி வரணும்னு ஆசை படாதீங்க அதுக்கு தான் அவங்களே இருக்காங்களே.. நீங்க நீங்களா வாங்க
2. விளையாட்டில் மேம்படனும்னா அரசியல்ல புகுந்து விளையாட்டு பண்ணுங்க.. விளையாட்டுல அரசியல் பண்ணாதீங்க.
3. எதனை யாரால் முடிக்க முடியும் என பார்த்து எவனை எங்க உக்கார வெக்கணும்னு திறமை வெச்சு முடிவு பண்ணுங்க.
4. பேனரால் இறந்த சுபஸ்ரீ குடும்பத்துக்கு என்னோட ஆறுதல்.! இது போன்ற சமூக பிரச்சனைக்கு ஹாஷ் டாக் போடுங்க சமூக பிரச்சனைல கவனம் செலுத்துங்க.
5. பேனர் கட் அவுட்லாம் கிழிச்சப்போ ரசிகர் வறுத்தப்பட்ட அளவு நானும் வறுத்தப்பட்டேன்.. என் போட்டோ கிழிங்க உடைங்க என் ரசிகன் மேல கை வைக்காதீங்க… அப்படி வச்சா..
என் ரசிகர்கள் எவ்வளோ ஆசைகளோட கனவோட சிரமத்துள பேனர்லாம் வெக்குறாங்க அதை கிழிச்சா அவங்களுக்கு கோவம் வரது நியாயம் தான்! அதுக்காக அவங்க மேல கை வைக்காதீங்க இது வேண்டுகோள்! கேக்க முடிஞ்சா கேளுங்க இல்லானா (ஒரு சின்ன புன் சிரிப்பு). ’ என்று கூறினார்.





