சினிமா

தாணு தயாரிப்பில் முதன்முறையாக சூர்யா-வெற்றிமாறன் கூட்டணி

தனுஷ் நடித்த பொல்லாதவன், ஆடுகள், வடசென்னை மற்றும் அசுரன் ஆகிய படங்களை இயக்கியவர் வெற்றிமாறன்.

இதனிடையில் தனுஷ் தயாரித்த விசாரணை படத்தையும் இயக்கியிருந்தார்.

பெரும்பாலும் தனுஷையே இயக்கி வந்த வெற்றிமாறன் தற்போது சூரி நாயகனாக நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார்.

இதனையடுத்து எதிர்பாராத கூட்டணியை அமைத்துள்ளார்.

ஆம். முதன்முறையாக சூர்யா நடிக்கவுள்ள படத்தை இயக்குகிறார்.

சூர்யாவின் நடிப்பில் இது அவரின் 40வது படமாக உருவாகுகிறது.

இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார்.

ஏற்கெனவே தனுஷின் அசுரன் படத்திற்காக தாணு மற்றும் வெற்றிமாறன் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Vetrimaaran and Producer Thanu team up for Suriya 40

Facebook Comments

Related Articles

Back to top button