Spotlightசினிமாதமிழ்நாடு

தன் பிறந்த நாளில் 250 குடும்பங்களுக்கு கொரானா நிவாரண பொருட்களை வழங்கிய மயிலாடுதுறை ரஜினி ரசிகர்!!

யிலாடுதுறை கூறை நாடு எடத்தெரு சேர்ந்த ரஜினி மன்ற நிர்வாகியான செந்தில் தனது பிறந்த நாளான இன்று மயிலாடுதுறை கூறை நாடு சுற்றுவட்டார மக்களுக்கு கொரானா நிவாரண பொருட்களை வீடு வீடாக சென்று வழங்கினார்கள்.

ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் டி.எல்.ராஜேஸ்வரன் ஆலோசனையின் பேரில் நகர செயலாளர் பவுன் முருகானந்தம் முன்னிலையில் 250 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறிகள் என வீட்டுக்குத் தேவையான அத்தியாவசிய நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மன்றத்தை சேர்ந்த விஜயகுமார், அந்தோணிசாமி, செந்தில், மணிக்கன்னண், ராஜா, பக்ருதின், நவீன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி நிர்வாகி ராஜன் நன்றி கூறினார்.

பிறந்த நாளில் நிவாரண உதவிகள் வழங்கிய செந்தில் வெளிநாடு வாழ் தமிழர். பல ஆண்டுகளாக தனது பிறந்த நாளின் போதும், ரஜினிகாந்த் பிறந்த நாளின் போதும் பல்வேறு உதவிகள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

Related Articles

Back to top button