Spotlightசினிமாதமிழ்நாடு

தூத்துக்குடி சிவகளையில் இரட்டைக் கொலை; மூவர் கைது!

தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் இரண்டு பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி: சிவகளையில் விக்னேஷ் (22) என்பவருக்கும் அதே பகுதியில் வசித்த பெண்ணுக்கும் ஒரு வாரத்திற்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த திருமணத்திற்கு விக்னேஷ் வீட்டில் எதிர்ப்பு தரப்பட்டுள்ளது. இந்நிலையில், மகனை மட்டும் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார் விக்னேஷின் தாய்.

இந்நிலையில், நேற்று மாலை சுமார் 6 மணியளவில் விக்னேஷின் வீட்டிற்குள் புகுந்த புதுப்பெண்ணின் அண்ணன் உட்பட சிலர், வீட்டில் இருந்த விக்னேஷ், அவரின் தாய், தந்தை, விக்னேஷின் மாமா  (28) என அனைவருக்கும் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர்.

இதில், படுகாயமடைந்த விக்னேஷின் தாய் சம்பவ இடத்திலேயே இறந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் விக்னேஷின் மாமாவும் உயிரிழந்தார்.

விக்னேஷ் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த இரட்டைக்கொலை வழக்கில் பெண்ணின் அண்ணன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்ணன் முத்துராமலிங்கம், சித்தப்பா அருணாச்சலம், முத்துசுடர் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button