Spotlightசினிமா

தளபதி விஜய்யின் அடுத்த பட இயக்குனர் இவர் தான்.?

டிகர் விஜய் நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது.

இந்நிலையில், விஜய்யின் அடுத்த படத்தை யார் இயக்கவிருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இதனைத் தொடர்ந்து விஜய்யின் அடுத்த பட இயக்குனர் நெல்சன் திலிப்குமார் என தெரிய வந்துள்ளது.

கோலமாவு கோகிலா படத்தினைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் படத்தினையும் இயக்கியுள்ளார் நெல்சன்.

விஜய்யுடன் இணையும் நெல்சன் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

படத்தின் டைட்டில் மற்றும் அறிவிப்பு டிசம்பர் 31 அல்லது ஜனவரி 1ஆம் தேதி இருக்கும் எனவும் தெரிகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button