Spotlightசினிமா

கோடிகளை குவிக்கும் சர்தார்… ஹாட்ரிக் ஹாப்பியில் கார்த்தி!

டிகர் கார்த்தி நடிக்க பி எஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகி தீபாவளி தின கொண்டாட்ட படமாக வெளிவந்த திரைப்படம் தான் “சர்தார்”.

படம் வெளியாகி மக்கள் மத்தியிலும் விமர்சன ரீதியாகவும் நல்லதொரு வரவேற்பைப் பெற்றதால் அரங்குகளில் கூட்டம் அலைமோதியது.

தீபாவளி தினத்தை முன்னிட்டு தொடர்ந்து விடுமுறை தினம் என்பதாலும், பாசிடிவான விமர்சனங்களாலும் மக்கள் படத்திற்கு படையெடுத்த வண்ணம் இருந்தனர். இதனால் தொடர்ந்து திரையரங்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருந்தது.

கதை, திரைக்கதை, இசை என அனைத்தும் படத்திற்கு பக்கபலமாகவே இருந்தது. இந்நிலையில் படம் வெளியாகி 11 நாள் ஆகியுள்ள நிலையில் இதுவரை சுமார் 85 கோடி ரூபாய் வசூலை வாரிக்குவித்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விருமன், பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்குப் பிறகு சர்தார் படமும் ஹிட் அடித்துள்ளதால் ஹாட்ரிக் வெற்றிக் களிப்பில் இருந்து வருகிறார் நாயகன் கார்த்தி.

Facebook Comments

Related Articles

Back to top button