
சென்னை பெரு வெள்ளத்தில் சிக்கி பலரும் இன்னும் மீளாமல் இருந்து வருகின்றனர்.
பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வரும் சூழலில், நடிகர் கார்த்தியின் மக்கள் நல மன்றத்தின் சார்பாக சுமார் 1000 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.
கார்த்தியின் சார்பில் இந்த உணவு வழங்கப்பட்டுள்ளது. இன்றும் பாதிக்கப்பட்ட பல பகுதிகளுக்கு உணவு கொண்டு செல்ல தயாராகி வருகின்றனர் மன்றத்தினர்.
கார்த்தியின் இந்த செயலுக்கு இணையத்தில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Facebook Comments





