Spotlightசினிமா

சுந்தர் சி – வடிவேலு நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் “கேங்கர்ஸ்”!

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ளது ”கேங்கர்ஸ். இப்படத்தில் சுந்தர் சி ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா நடித்துள்ளார்.

படத்தின் ட்ரெய்லர் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சத்யா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சுந்தர் சி – வடிவேலு கூட்டணி சுமார் 14 வருடங்களுக்குப் பிறகு கைகோர்த்திருப்பதால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இப்படம் ஏப்ரல் 24ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

அவ்னி சினி மேக்ஸ் மற்றும் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிட்டேட் நிறுவனம் இரண்டும் இணைந்து இப்படத்தைத் தயாரித்திருக்கிறது.

Facebook Comments

Related Articles

Back to top button