
“ROOT – Running Out of Time” படத்தின் போஸ்ட்-ப்ரொடக்ஷன் முழு மூச்சுடன் வேகமாக நடைபெற்று வருகிறது; படத்தின் மீது தயாரிப்பாளர் முஜீப் முழு நம்பிக்கை!
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சை-ஃபை கிரைம் திரில்லர் திரைப்படமான ROOT – Running Out of Time தற்போது அதன் இறுதி வடிவத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், திட்டமிட்டபடியும் தீவிரமாகவும் போஸ்ட்-ப்ரொடக்ஷன் பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன.
சென்னை மற்றும் பல்வேறு லொகேஷன்களில் படப்பிடிப்பை நிறைவு செய்ததைத் தொடர்ந்து, படம் தற்போது முழுமையான போஸ்ட்-ப்ரொடக்ஷன் கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. எடிட்டிங், சவுண்ட் டிசைன், இசை அமைப்பு, VFX இணைப்பு மற்றும் DI பணிகள் அனைத்தும் ஒரே நேரத்தில் விரைவாக நடைபெற்று வருகின்றன. கற்பனை செய்யப்பட்ட அளவுக்கும் கனவுக்கும் இணையாக, ஒரு பரபரப்பான சினிமா அனுபவத்தை உருவாக்குவதே படக்குழுவின் இலக்காக உள்ளது.
இயக்குனர் சூர்யபிரதாப் பேசும் போது, “ரசிகர்களிடம் படத்தினை தெளிவாக கொடுப்பதில் நாங்கள் தெளிவாக இருந்தோம். அர்ஜூன் ராஜா என்பவர் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரன்னிங் அவுட் ஆஃப் டைம் என்பது தான் ரூட்.
இதுதான் என்னுடைய முதல் படம். இதற்கு முன் வெப் சீரிஸ் ஒன்று செய்திருக்கிறேன். அது இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. நாளைய இயக்குனர் படைப்பில் இருந்து வந்தவன் நான். அதில் பெரிதாக எக்ஸ்பிரியன்ஸ் கிடைத்தது. கோச்சடையான் படத்தில் பணிபுரிந்திருக்கிறேன்.
தயாரிப்பாளரை சந்தித்தேன். என்னை ஓகே செய்தார்கள், கெளதம் ராம் சார்க்கு நான் இந்த கதை தான் சொல்ல போகிறேன் என்று தயாரிப்பாளருக்கு தெரியாது. தயாரிப்பாளர் என்மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தனர்.
நாம ஒரு படம் செய்கிறோம். என்று மட்டும் தான் தயாரிப்பாளர் சொன்னார். கெளதம் சார்க்கு கதை சொன்னதும் மூன்று நாட்களில் கதையை ஓகே செய்தார். மூன்று நாட்களில் திரைக்கதையை எழுதி முடித்தேன். சினிமாவில் எது எப்போது க்ளிக் ஆகும் என்று தெரியாது. அதுபோல தான் இந்த படம் எனக்கு அமைந்தது.
கெளதம் சார் ஓகே சொன்ன இரண்டு மாதத்தில் ஷூட்டிங் கிளம்பினோம். படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. ஏப்ரல் மாதத்தில் படத்தினை திரைக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். விரைவில் அதற்கான அறிவிப்புகள் வரும்.” என்றார்.
படத்தின் உருவாக்கம் எவ்வாறு முன்னேறி வருகிறது என்பதில் தயாரிப்பாளர் ஷேக் முஜீப் தனது மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.
அவர் கூறியதாவது,
“போஸ்ட்-ப்ரொடக்ஷனில் தற்போது உருவாகி வரும் அவுட்புட்டால் நாங்கள் மிகுந்த திருப்தியடைந்துள்ளோம். எடிட்டிங், பின்னணி இசை, VFX, சவுண்ட் டிசைன் என ஒவ்வொரு துறையும் எதிர்பார்ப்பை மீறி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ROOT என்பது தொழில்நுட்ப ரீதியாக சவாலான திரைப்படம். அந்த சவால்களை துல்லியத்துடனும் அர்ப்பணிப்புடனும் படக்குழு எதிர்கொள்வதால், நாங்கள் எதிர்பார்த்த தரத்தை அடைய முடிகிறது. ரஷ் காட்சிகளும் தற்போதைய கட்-களும் மிகுந்த நம்பிக்கையை அளிக்கின்றன. பார்வையாளர்கள் திரையில் தீவிரமும் புதுமையும் நிறைந்த ஒரு அனுபவத்தை உணர்வார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.”
சூரியபிரதாப் S எழுதி இயக்கியுள்ள ROOT – Running Out of Time, சஸ்பென்ஸ், எமோஷனல் மற்றும் உயர்கருத்து கொண்ட கதை சொல்லலை ஒன்றிணைக்கும் ஒரு வலுவான திரைக்கதை மற்றும் திறமையான நடிகர்களின் சிறப்பான நடிப்புகளுடன் உருவாகியுள்ளது.
இந்த படத்தில் கௌதம் ராம் கார்த்திக் நாயகனாக நடித்துள்ளதுடன், அபார்ஷக்தி குரானா முக்கிய கதாபாத்திரத்தில் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். இவர்களுடன் பவ்யா திரிகா, Y. Gee. மகேந்திரா, பாவ்னி ரெட்டி, லிங்கா, RJ ஆனந்தி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
வெரஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில், ஷேக் முஜீப், சஞ்சய் சங்கர், ராஜராஜன் ஞானசம்பந்தம், தனிஷ்டன் பெர்னாண்டோ ஆகியோர் தயாரித்துள்ள இந்தத் திரைப்படம், உயர்தரமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் வகையில் அனைத்து தொழில்நுட்ப அம்சங்களையும் சிறப்பாக மேம்படுத்தி படத்தை உருவாக்கி வருகிறது.
தொழில்நுட்பக் குழு
ஒளிப்பதிவு – அர்ஜுன் ராஜா
எடிட்டிங் – ஜான் ஆபிரகாம்
இசை – அரன் ரே
CEO – டாக்டர் டி. அலிஸ் ஏஞ்சல்
ஆக்ஷன் கோரியோகிராபி – மிராக்கிள் மைக்கேல்
பிரொடக்ஷன் டிசைனர் – ஜகன் நந்தகோபால்
VFX – சந்தகுமார் (ஹோகஸ் போகஸ் ஸ்டூடியோஸ்)
ஆடை வடிவமைப்பு – தீப்தி RJ
பிரொடக்ஷன் கண்ட்ரோலர் – தனலிங்கம்
DI – பிரசாத் ஸ்டூடியோஸ்
கலரிஸ்ட் – ரங்கா
சவுண்ட் டிசைனர் – ஆனந்த் ராமச்சந்திரன்
பப்ளிசிட்டி டிசைனர் – தினேஷ் அசோக்
பப்ளிக் ரிலேஷன்ஸ் – ரேகா
டிஜிட்டல் புரமோஷன்ஸ் – டிஜிட்டலி பவர்ஃபுல்
போஸ்ட்-ப்ரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், Final output ன் மீது படக்குழு மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பதால், ROOT – Running Out of Time பார்வையாளர்களுக்கு நாற்காலியின் நுனியில் அமர வைக்கும் ஒரு பரபரப்பான சினிமா அனுபவத்தை வழங்க தயாராகி வருகிறது.





