
நடிகர்கள்: C.நிகில், ஹர்ஷா, இமான் அண்ணாச்சி , பிர்லா போஸ், youtube புகழ் காத்து கருப்பு கலை, இன்ஸ்டா புகழ் கற்பகம் , கவிதா விஜயன், சமீர் ), சிட்டி ராஜா, அருண்ராஜா, பிரபாகர்,
ஒளிப்பதிவு – சி.பாரதி ராஜன் Dft
பாடல்கள் – சூரியமூர்த்தி
இசை – வேலன் சகாதேவன்
படத்தொகுப்பு – D.V. மீனாட்சி சுந்தர்
நடனம் – தினா
ஸ்டண்ட் – கார்த்திக் வர்மன்
தயாரிப்பு நிறுவனம் – ACM சினிமாஸ்
தயாரிப்பு – சூரியகலா சந்திரமூர்த்தி
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் ஜெகன் ராயன்.
ஏலகிரி தான் படத்தின் கதைக்களம். அங்கிருக்கும் தனியார் ஹோட்டல் ஒன்றில் வேலை பார்க்கும் இளைஞர்கள் பலரை வலுக்கட்டாயமாக அங்கு வேலை வாங்குகிறார் அந்த ஹோட்டல் மேனேஜர்.
அந்த ஹோட்டலில் இருந்து தப்பிக்க நினைக்கும் இளைஞர்களை அடித்து கொடுமைப்படுத்துகிறார். அதுமட்டுமல்லாமல், அந்த ஹோட்டல் அறையில் வைத்திருக்கும் ஹிடன் கேமரா மூலமாக அறையில் இருக்கும் ஜோடிகளை வீடியோ எடுத்து அவர்களை ப்ளாக் மெயில் செய்து பணம் பறிக்கும் வேலையும் பார்த்து வருகிறது இந்த கும்பல்.
இந்த ஹோட்டலில் வந்து வேலைக்குச் சேர்கின்றனர் ஹீரோ நிகிலும் அவரது நண்பரான காத்து கருப்பு கலையும். மேனேஜரை கண்டு அனைவரும் நடுங்கி போய் நிற்க, நிகில் அவரை எதிர்த்து அவ்வபோது நிற்கிறார்.
இந்நிலையில், முகமுடி அணிந்த நபர் ஒருவர் அந்த ஹோட்டல் மேனஜரை கொடூரமான முறையில் கொலை செய்து விடுகிறார். அதுமட்டுமல்லாமல், அங்கிருந்த ஹார்ட் டிஸ்க் ஒன்றையும் எடுத்துச் சென்று விடுகிறார் அந்த நபர்.
அதன்பிறகு பல சம்பவங்கள் அரங்கேறுகிறது. இறுதியில், மேனேஜரை கொன்றது யார்.? எதற்காக அவர் கொல்லப்பட்டார்.?? அதற்கு பின்னால் இருக்கும் காரணங்கள் என்ன.??? என்பதே படத்தின் மீதிக் கதை.
கதையின் நாயகனான நிகில், கதைக்கேற்ற நாயகனாக ஜொலித்திருக்கிறார். அமைதியான ஒரு முகத்தை வைத்துக் கொண்டு, அவ்வப்போது பொங்கி எழும் ஒரு அதிரடி நாயகனாக படம் முழுக்க வந்திருந்தார். மொத்த கதையும் இவரை மையப்படுத்தியேச் சென்று கொண்டிருக்கிறது. சின்ன சின்ன குறைகள் எட்டிப் பார்த்தாலும், அடுத்தடுத்த படங்களில் அதனை நிவர்த்திச் செய்து விடுவார் என்ற நம்பிக்கையையும் இந்த படத்தில் அவர் கொடுத்திருக்கிறார்.
நாயகியான ஹர்ஷா, அழகான தோற்றத்தோடு, கதாபாத்திரத்திலும் நச்சென பொருந்தியிருக்கிறார். சின்ன சின்ன இடங்களில் கூட, தனது ரியாக்ஷனால் அனைவரையும் கவர்ந்திருக்கிறார். காத்து கருப்பு கலையின் நடிப்பு கலகலப்பானது. பல இடங்களில் தனது உடல் மொழியால் அனைவரையும் சிரிக்க வைத்திருக்கிறா. இன்னும் அவரை பயன்படுத்தியிருக்கலாமோ என்றும் கூற வைக்கும் அளவிற்கான நடிப்பைக் கொடுத்திருந்தார்.
ஆரம்பத்தில் எங்கே சென்று கொண்டிருக்கிறது இந்த கதை என்று சற்று சலிப்பை ஏற்படுத்திக் கொண்டுச் சென்றாலும், பிற்பாதியில் நடக்கும் ட்விஸ்ட் காட்சிகள் படத்தின் ஓட்டத்தை சீராக்கி விட்டது.
காட்சிக்க்கு காட்சி ட்விஸ்ட் காட்சிகள் படத்தில் நடப்பதால், படம் பார்ப்பவர்களால் எந்த இடத்திலும் எதையும் யூகிக்க முடியாத வண்ணம் படத்தை மிகவும் நேர்த்தியாக இயக்கியிருக்கிறார் இயக்குனர்.
குடும்ப செண்டிமெண்ட், ஹோட்டலில் நடக்கும் முறைகேடுகள், வழக்கமான சினிமாவிற்குத் தேவையான க்ளைமாக்ஸ் என ஒரு கமர்ஷியல் படத்திற்கு என்னவெல்லாம் வேண்டுமோ அவை அனைத்தையுமே இந்த படத்திற்குள் கொண்டு வந்து நிரப்பியிருக்கிறார் இயக்குனர்.
ஒளிப்பதிவு மற்றும் இசை இரண்டுமே படத்திற்கு பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது.
ரூம் பாய் – ஹிட் பாய்…
Rating – 3.25/5





