Spotlightசினிமா

சூனியக்காரி Vs தேவதை! மிரட்டும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர் – அக்டோபர் 16ல் ரிலீஸ்!

GM Morgan Films தயாரிப்பில், இயக்குநர் R. ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகியுள்ள ஃபேண்டஸி திரைப்படம் ‘டிரோன்ஸ்’ (Drones). இப்படம் அக்டோபர் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் மற்றும் புதிய போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம், குரைஷி, சினிமாவாலா சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம், ஹாரர், ஃபேண்டஸி, சயின்ஸ் ஃபிக்ஷன் மற்றும் காமெடி அம்சங்களை இணைத்து உருவாகியுள்ளது.

ப்ளாக் ஹோல் எனும் மர்மமான இடத்துக்குள் நுழையும் மூவர், அவர்களைச் சுற்றி நடக்கும் விசித்திரமான சம்பவங்கள், சூனியக்காரிக்கும் தேவதைக்கும் இடையேயான மாயாஜால மோதல் என வித்தியாசமான காட்சிகளுடன் வெளியாகியுள்ள டிரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும், சிவப்பு நிற ஆடையில் சூனியக்காரியும், வெள்ளை நிற ஆடையில் தேவதையும் நேருக்கு நேர் மோதும் புதிய போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இப்படத்திற்கு ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்ய, ஹரி S.R. இசையமைத்துள்ளார். சதீஷ் சூர்யா படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.

ஃபைவ் ஸ்டார் நிறுவனத்தின் K. செந்தில் வெளியிடும் ‘டிரோன்ஸ்’ திரைப்படம் அக்டோபர் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

டிரெய்லர்: https://youtu.be/bKJve0D7p-Y

 

Facebook Comments

Related Articles

Back to top button