Spotlightசினிமா

ஜி.வி. பிரகாஷ் வெளியிட்ட ‘சிட்டா’ ஃபர்ஸ்ட் லுக்! கிராமத்து அரசியலைப் பேசும் கலகலப்பான திரைப்படம்!

நகைச்சுவையுடன் சமூகக் கருத்தையும் சொல்லும் வகையில் உருவாகியுள்ள ‘சிட்டா’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் குமார் வெளியிட்டுள்ளார்.

லட்சுமி அம்மாள் பிலிம்ஸ் சார்பில் செந்தில்முருகன் தயாரித்துள்ள இப்படத்தை ‘சூரன்’ பட இயக்குநர் பாலு நாராயணன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.

இப்படத்தில் சிபி கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக ஆராத்யா சாய் நடிக்கிறார். கிராம நிர்வாக அலுவலராக ஆதியா பிரசாத் நடித்துள்ளார். மேலும் பாலசரவணன், இயக்குநர் மூர்த்தி, மதுமிதா, அருவி மதன், செந்தில்முருகன், சதீஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கிராம நிர்வாக அலுவலகத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில், பொதுமக்கள் பட்டா, சிட்டா உள்ளிட்ட ஆவணங்களைப் பெறுவதில் சந்திக்கும் சிரமங்களும், கிராமத்து அரசியலும் நகைச்சுவையுடன் பேசப்படுகின்றன.

படத்திற்கு வாசுதேவன் ஒளிப்பதிவு செய்ய, DC இசையமைத்துள்ளார். மோகன் ராஜன் பாடல்களை எழுதியுள்ளார். R.K. வினோத் கண்ணா படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

கிராமங்களில் அன்றாடம் நடைபெறும் சம்பவங்களை யதார்த்தமாகவும் சுவாரஸ்யமாகவும் பதிவு செய்துள்ளதாக இயக்குநர் பாலு நாராயணன் தெரிவித்துள்ளார்.

‘சிட்டா’ திரைப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், படம் திரையரங்குகளில் வெளியாகத் தயாராகி வருகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button