Spotlightசினிமா

நவீன் சந்திராவின் 51வது படமான ‘NC 51’ படப்பிடிப்பு நிறைவு!

நடிகர் நவீன் சந்திராவின் 51வது திரைப்படமான ‘NC 51’ படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 26ஆம் தேதி சென்னையில் நிறைவடைந்துள்ளது.

ஆர்.பி. பாலா இயக்கும் இப்படத்தை ஆர்.பி. பாலா பிலிம்ஸ் மற்றும் பி.ஜி. முத்தையா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

இப்படத்தில் நவீன் சந்திராவுடன் ஹரிபிரியா ரோஷிணி, பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பி.ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்ய, சக்தி பாலாஜி இசையமைக்கிறார். அஜய் மனோஜ் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார்.

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இறுதிக்கட்டப் பணிகளை முடித்து விரைவில் திரையரங்குகளில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button