
இயக்கம்: ஏ ஆர் வினோத்
நடிகர்கள்: லெனின், ஆர்வி உதயகுமார், முனிஷ்காந்த், அனுமோகன், அஸ்மின்
தயாரிப்பாளர்: லெனின்
இசை: கைலாஷ் மேனன்
ஒளிப்பதிவு: சதீஷ் மெய்யப்பன்
கல்லூரியில் தேர்தல் நடக்கிறது. அதற்காக அந்தப் பதவிக்கு நிற்கிறார் லோக்கல் எம்எல்ஏவின் மகன். அவரை எதிர்த்து ஒரு மாணவர் போட்டியிட எண்ணுகிறார். எம்எல்ஏவின் மகனால் தனது உயிருக்கு ஏதேனும் நடந்து விடும் என்றெண்ணி, அந்த மாணவன் கல்லூரியின் முன்னாள் மாணவனர் தலைவராக இருந்த லெனினிடம் சென்று ஆதரவு கேட்கிறார்.
அவரும் அதற்கு சம்மதிக்கிறார். இந்த சூழ்நிலையில் எம்எல்ஏவின் மகளுக்கும் லெனினுக்கும் இடையே காதல் முளைத்து விடுகிறது. ஆனால், எம் எல் ஏ தனது மகளை வேறொரு இடத்தில் திருமணம் முடித்து வைக்க பிளான் செய்கிறார். இதையெல்லாம் முறியடித்து ஹீரோயின் கரத்தை எப்படி லெனின் கைப்பற்றுகிறார்.? கல்லூரிக்குள் நடக்கும் கொலையை ஹீரோ எப்படி கையாண்டார்.?? என்பதே படத்தின் மீதி கதை.

கதாநாயகன் லெனின் படத்திற்கு என்ன தேவையோ அதை மட்டுமே கொடுத்து அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறார். எந்த ஒரு காட்சியிலும் கதாபாத்திரத்தை விட்டு வெளியே செல்லும் நடிப்பை ஒரு இடத்தில் கூட அவர் கொடுக்கவில்லை. அதுவே படத்திற்கு பெரிய மூலதனமாக இருந்தது.
கல்லூரி வளாகத்திற்குள்ளே நடக்கும் கொலையை மையப்படுத்தியே கதை நகர்வது சுவாரஸ்யமான ஒன்றுதான். அதுமட்டுமல்லாமல் அடுத்தடுத்து நடக்கும் ட்விஸ்ட்கள் படத்திற்கு பெரிதாகவே கை கொடுத்திருக்கிறது.
எம்எல்ஏவாக நடித்திருக்கும் ஆர்வி உதயகுமார் இந்த படத்தில் தனது நடிப்பின் திறமையை நன்றாகவே வெளிப்படுத்தி இருக்கிறார். ஹீரோயினாக நடித்திருக்கும் அஸ்மின் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகவும் கச்சிதமாக செய்து முடித்து இருக்கிறார்.

கைலாஷ் மேனனின் இசை படத்திற்கு ஒரு பெரும் பில்லர் ஆக இருந்திருக்கிறது. சதீஷ் மெய்யப்பனின் ஒளிப்பதிவு காட்சிகளை அழகாக காட்டியிருக்கிறது.
க்ரைம் த்ரில்லர் கதையாக படம் நகர்ந்திருப்பது படத்தின் சுவாரஸ்யத்தை ஏற்றியிருக்கிறது. அதற்குஏற்றாற்போல, திரைக்கதையை வேகமாக கொண்டு சென்றது படத்தின் மீதான ஈர்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது.



