
2019 ஐபிஎல் தொடரின் இரண்டாம் தகுதிச் சுற்றுப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை சந்தித்தது. தோனியின் சென்னை சூப்பர் கிங்க்ஸ்.
இந்தப் போட்டியில் தோனி மீண்டும் தான் ரிவ்யூ கேட்பதில் கில்லி என நிரூபித்தார். இந்த போட்டியில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது.
அந்த அணியின் துவக்க வீரர் ப்ரித்வி ஷா, மூன்றாவது ஓவரில் சந்தித்த பந்து அவரது காலில் பட்டது. பந்து வீசிய தீபக் சாஹர் இதற்கு ரிவ்யூ கேட்டார். ஆனால், அம்பயர் அவுட் கொடுக்க மறுத்து விட்டார்.
பின்னர், தீபக் சாஹர் கேப்டன் தோனியை பார்க்க, தோனி ஒரு கணம் சந்தித்து விட்டு, ரிவ்யூ கேட்டார். ரீப்ளேவில் பந்து ப்ரித்வி ஷா தொடையில் பட்டு, சரியாக ஸ்டம்ப்புகளை பதம் பார்த்தது.
அம்பயர் தன் தவறான தீர்ப்பை மாற்றி, அவுட் கொடுத்தார். சென்னை அணி தன் முதல் விக்கெட்டை பெற்றது. தோனி இதுவரை ரிவ்யூ கேட்பதில் 86 சதவீதம் சரியாக முடிவெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதியாக டெல்லி அணி 147 ரன்களுக்கு 9 விக்கெட்டுளை இழந்திருந்தது. சென்னை அணி 19 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் எடுத்து வெற்றியை கைப்பற்றியது.