Spotlightசினிமா

ஹன்சிகாவின் 50-வது படத்திற்கு தனுஷ் செய்யப்போகும் உதவி!!

முன்னிலை கதாநாயகியாக முன்னிறுத்தும் ஒரு படத்தில் ஹன்சிகா நடித்து வருகிறார். இப்படத்தினை அறிமுக இயக்குனர் ஜமீல் இயக்கி வருகிறார்.

இந்த படம் ஹன்சிகாவின் 50.ஆவது படம் என்பதுக் குறிப்பிட தக்கது.இந்த படத்தின் தலைப்பு வருகின்ற 11ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

படத்தினை பற்றி இயக்குனர் பேசும் போது, “இந்த கதையையும் , திரை கதையையும் மெருகேற்றும் இறுதி கட்ட பணிகள் நடை பெற்று கொண்டு இருந்து, இப்பொழுது அந்த பணிகள் முடிவடைந்து விட்டது.இந்த கதையின் நாயகி அழகும், அறிவும், தீரமும், இளமையும், நிறைய பெற்றவள். ஹன்சிகா உரிமையுடன் இந்த கதாபாத்திரத்துக்கான ஆசனத்தில் வந்து அமர்ந்து விடுகிறார்.

வருகின்ற 11ஆம் தேதி , அவரது 50 ஆவது படத்தின் title மற்றும் முதல் பார்வை வெளி வருவது எனக்கு மிக பெரிய பெருமை. தனுஷ் சார் தலைப்பை வெளியிட இருக்கிறார். Etcetra entertainment என்கிற நிறுவனத்தின் சார்பில் மதியழகன் தயாரிக்கும் இந்த படத்தின் இசை அமைப்பாளர் ஜிப்ரான் ஆவார். செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ளது. 2019 ஆம் ஆண்டின் விடியல் மற்றுமொரு லேடி சூப்பர் ஸ்டாரை சந்திக்க உள்ளது” என்றார்.

Facebook Comments

Related Articles

Back to top button