விமர்சனங்கள்

மகா அவதார் நரசிம்மா – விமர்சனம்

சாபம் பெற்ற பெண்ணின் வயிற்றில் அசூரனாக பிறக்கின்றனர் இரண்யகசுபும் அவரது சகோதரனான இரண்யாட்சன்.

இவர்கள், கடவுள் விஷ்ணுவை தனது எதிரியாக பாவித்துக் கொண்டு தொடர்ந்து அவரோடு மோதுவதையே பழக்கமாக வைத்திருக்கின்றனர். தேவலோகத்தில் வாழும் தேவர்களுக்கு இவர்களைக் கண்டால் அச்சம்.

தொடர்ந்து பல இன்னல்களை கொடுத்த இளைய சகோதரன் இரண்யாட்சனை, வராக அவதாரம் எடுத்து வதம் செய்கிறார் விஷ்ணு பகவான்.

வருடங்கள் கடந்தோட, மற்றவர்களை தாக்குவதும் அழிப்பதுமாக தனது சாம்ராஜ்யத்தை பலமாக்கிய இரண்யகசுபு, எளிதில் மடிந்திடாத வரமும் பெற்று வைத்திருக்கிறான்.

இரண்யகசுபுவிற்கு மகன் ஒருவன் இருக்கிறான். 4வயது மதிக்கத்தக்க அவரது மகன் பெயர் பிரகலாதன். இரண்யகசுபுவை கடவுளாக வணங்கிக் கொண்டிருக்கும் அந்த நாட்டில், விஷ்ணுவை கடவுளாக வழிபடுகிறார் பிரகலாதன்.

அன்பு செலுத்துவதிலும் விஷ்ணுவை வழிபடுவதிலும் தனது முழு நேர பணியாக வைத்திருக்கிறார் பிரகலாதன்.

தனக்குப் பிறந்த மகனா இப்படி என்று கொதித்தெழுந்த இரண்யகசுபு, பிரகலாதனுக்கு மரண தண்டனை விதிக்கிறார்.

மரண தண்டனை நிறைவேற்றுகின்றனர். விஷ்ணுவின் அனுக்கிரகத்தால் பிரகலாதனை யாராலும் அழிக்க முடியவில்லை.

தொடர்ந்து பிரகலாதனை கொலை செய்ய முயற்சிகள் நடக்க, அனைத்தையும் விஷ்ணு முறியடித்துவிடுகிறார். இறுதியில், மகா அவதாரமான நரசிம்ம அவதாரம் எடுத்து இரன்யகசுபுவை எப்படி விஷ்ணு வதம் செய்கிறார் என்பதே மீதிக் கதை.

அனிமேஷன் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் குழந்தைகளுக்கு பிடித்தமான காட்சிகளுடன் கதை நகர்கிறது. பொழுதுபோக்காக இருந்தாலும் கூட, புராண கதைகளை குழந்தைகள் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் படத்தினை உருவாக்கியிருக்கிறார்கள்.

வசன உச்சரிப்பு, இசை, காட்சியமைப்பு என அனைத்தையும் சரியாக கொடுத்திருக்கிறார்கள். அனைத்து பள்ளிகளிலுமே இப்படமானது திரையிடப்பட்டால், ஒரு புத்தகத்தை வாசித்து முடித்த ஒரு ஃபீல் நிச்சயம் கிடைக்கும்.

அனிமேஷனையும் மிகச் சரியாக கையாண்டிருக்கின்றனர் படக்குழுவினர். அதிலும் க்ளைமாக்ஸ் காட்சியான நரசிம்ம அவதாரத்தின் வேட்டை காட்சி மெய் சிலிர்க்க வைத்துவிட்டது.

நிச்சயம் திரையரங்குகிற்குச் சென்று ஒரு முறை பார்த்துவிட்டு வரலாம்.

Facebook Comments

Related Articles

Back to top button