
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அவர்கள், சிவகங்கைலிருந்து பல்வேறு நலத்திட்ட பணிகளை முடித்துவிட்டுதிருச்சி விமான நிலையம் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சாலையில், விபத்தில் அடிபட்டு கிடந்த முதியவரை கண்டதும் தனது வாகனத்தை நிறுத்தச் சொல்லி, ஓடிச் சென்று அவருக்கு முதலுதவி அளித்தார் அமைச்சர்.
முதலுதவி அளித்து முடிந்ததும் தனது பாதுகாப்பு வாகனத்திலே, அருகில் உள்ள மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தார்.
அப்பகுதி மக்கள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
Facebook Comments





