
ஒரு குடும்பத்தை டார்கெட் செய்து, அவர்களிடம் நன்றாக பழகி, அவர்களை கொன்று குடும்பத்தில் உள்ள பணம், நகைகளை கொள்ளயடிப்பதே ஸ்ரீகாந்தின் பழக்கம்.
இப்படியாக ஒரு குடும்பத்தை அழித்து ஓடும்போது, ஒரு பெண்ணிடம் சிக்கிக் கொள்கிறார் ஸ்ரீகாந்த். அந்த பெண், ஸ்ரீகாந்தை வைத்து தனது அக்கா ராய் லக்ஷ்மியை கொன்று பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை அனுபவிக்க திட்டம் போடுகிறார்.
அந்த பெண்ணின் திட்டம் பழித்ததா.? லக்ஷ்மிராயின் குடும்பம் என்னவானது.? ஸ்ரீகாந்த்தின் வில்லத்தனம் எடுபட்டதா .? என்பதே இப்படத்தின் கதை.
வில்லனாக அவதரித்த ஸ்ரீகாந்த், ஒரு புது முயற்சி ஒன்றை எடுத்து வைத்திருக்கிறார். ஆனால், அது என்னவோ எடுபடாமல் சென்று விட்டது. ஒரே மாதிரியான ரியாக்ஷனைத் தான் ஹீரோவாக நடிக்கும் போதும் வில்லனாக நடிக்கும் போதும் கொடுத்து வருகிறார். கொஞ்சம் பேட்டர்னை மாத்துங்க பாஸ்..
ராய் லக்ஷ்மி, தனது அனுபவ நடிப்பை காட்டினாலும் காட்சிகள் அது ஏனோ ஒட்டாமல் சென்று விட்டது. இரண்டாம் பாதியில் புலியோடு நடக்கும் மோதலில் ராய் லக்ஷ்மியின் நடிப்பை பாராட்டலாம்.
ஏனைய கதாபாத்திரங்கள் அனைவரின் கதாபாத்திரங்கள் ஏற்கமுடியவில்லை. டப்பிங்க் படத்தை பார்த்த ஒரு உணர்வை மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்துவிடுகின்ற்ன.
இரண்டாம் பாதியில் புலியோடு நடக்கும் யுத்த காட்சிகள் அருமையாக இருந்தாலும், அளவுக்குமீறினால் அமிர்தமும் நஞ்சாகிவிடுவது போல் அதிக நேர காட்சிகளால் எரிச்சலடைய வைத்து விடுகிறது.
எதையோ சொல்ல வந்து, எதையோ சொல்லியிருப்பது போன்று தான் பார்த்திபன் அவர்களின் இயக்கம் அமைந்துள்ளது.
அருள் தேவ் அவர்களின் பின்னனி இசை மிரட்டல்.. எம் வி பன்னீர் செல்வத்தின் ஒளிப்பதிவு பலம்.
மிருகா – போதும் முருகா…




