Spotlightசினிமாதமிழ்நாடு

பீச்சாங்கை கார்த்தி மற்றும் லிங்கா நடிக்கும் ‘பரோல்’.. ஏழு தமிழர்களின் விடுதலை கதை கருவா.?

பீச்சாங்கை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நாயகனாக அறிமுகமான நடிகர் கார்த்திக். இவரது அடுத்த படமாக உருவாகியிருக்கிறது ‘பரோல்’.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். மேலும், இப்படத்தில் லிங்கா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மதுசூதனன் தயாரிப்பில் துவாரக் ராஜா இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்துக்கு ராஜ்குமார் இசைமைத்துள்ளார்.

வித்தியாசமாக உருவாகியுள்ள ‘பரோல்’ படத்தின் போஸ்டர் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

ஏழு தமிழர்களின் விடுதலையை உறுதிபடுத்தாமல், ”பரோல்” மூலம் தொடர்ந்து இருட்டடிப்பு செய்து வரும் அரசுக்கு எதிராக இப்படம் உருவாகியுள்ளதா.? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button