Spotlightசினிமாவிமர்சனங்கள்

சமாரா விமர்சனம் 3/5

சார்லஸ் ஜோசப் இயக்கத்தில் சினு சித்தார்த் ஒளிப்பதிவில் தீபக் வாரியர் இசையில் நடிகர்கள் ரகுமான், பரத், சஞ்சனா திபு, பினோஜ் வில்யா, ராகுல் மாதவ், கோவிந்த் கிருஷ்ணா, உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “சமாரா”.

கதைப்படி,

படம் முழுவதும் ஹிமாச்சல் பிரதேசத்தில் நடக்கும்படியாக கதை நகர்கிறது. போலீஸ் அதிகாரியாக வரும் ரகுமான், தீவிரவாதி ஒருவனை டார்கெட் செய்கின்றனர். அவன் தப்பித்து விடுகிறான்.

அதே சமயத்தில், மற்றொரு தீவிரவாதியும் லோக்கல் ரவுடி ஒருவரும் பிணமாக ஒரு இடத்தில் கிடக்கின்றனர். உடல் அழுகிய நிலையில்.

இது ஒருபுறம் நடக்க, மற்றொரு புறம் இராணுவத்தில் பணிபுரிந்த பினோஜ் வில்யா தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில் விஷ வாயு தாக்கி உடல் முழுவதும் தோல் நோய் பரவி விடுகிறது. பார்ப்பதற்கு வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார்.

இதனால், மனைவி மகளை அழைத்துக் கொண்டு தனியாக சென்று விடுகிறார். அவ்வப்போது மகள் சஞ்சனாவை பார்த்து மட்டும் வருகிறார் பினோஜ்.

இச்சமயத்தில், ஒரு இடத்திற்கு தனியாக செல்லும் சஞ்சனா, கால் தடுமாறி கீழே விழுந்து விடுகிறார். பனி அதிகம் உள்ள பகுதி என்பதால் அதிக தூரம் சறுக்கி, பிணமாக கிடந்த ரெளடி மீது விழுந்து விடுகிறார். அழுகிய நிலையில் இருந்த ரெளடியின் ரத்தம் சஞ்சனா மீது ஒட்டி விடுகிறது.

அதன் பிறகு அங்கு வரும் ரகுமான் & டீம், பிணத்தின் மீது செலுத்தப்பட்டது ஒரு வகையான வைரஸ் என்பதை கண்டுபிடிக்கின்றனர். இதனால், சஞ்சனாவும் வைரஸால் பாதிக்கப்படுகிறார்.

இதனால், தனிமையில் வைக்கப்படுகின்றனர் அப்பா பினோஜும் மகள் சஞ்சனாவும்.

இறுதியாக அந்த வைரஸ் எங்கு இருந்து வந்தது.?? வைரஸால் பாதிக்கப்பட்ட மகள் சஞ்சனாவை பினோஜ் காப்பாற்றினாரா.?? என்பதே படத்தின் மீதிக் கதை.

மப்டியில் போலீஸாக வலம் வரும் ரகுமான், தனக்கு கொடுக்கப்பட்டதை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார். ஆங்காங்கே இவருக்கான ஹீரோயிசம் செய்வதற்கான இடமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இறந்து போன ரெளடியின் கையை தேடும் பணியில் எதற்காக ரகுமான் & டீம் ஈடுபட்டனர் என்பது தெரியவில்லை. அதற்கும் படத்திற்கும் எந்த வித சம்மந்தமும் இல்லாமல் தான் கதை நகர்ந்தது.

சஞ்சனா திபு காட்சிகளுக்கு அழகாக இருந்தார். வைரஸ் உடல் முழுவதும் பரவிய போது, சஞ்சனாவின் உட்ச பட்ச நடிப்பை காண முடிந்தது. தந்தையாக பினோஜ் உடல் முழுவதும் ஒருவிதமான நோய் பரவி இருந்ததோடு நடித்தது பாராட்டும்படியாக இருந்தது.

பரத்தும் ஒரு கேரக்டர் செய்திருக்கிறார். டாக்டராக வருகிறார். இறுதியில் இவருக்கும் ட்விஸ்ட் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது. டப்பிங்க் பரத்தின் குரல் இல்லாமல் இருப்பது பெரும் நெருடல்.

கதைகள் பல வகையாக பின்னப்பட்டது படத்தின் மீதான ஈர்ப்பை குறைத்துவிடுகிறது. அதுமட்டுமல்லாமல், யார் என்ன கதாபாத்திரம் என்று சொல்லாமல் கதையை நகர்த்தியது கதையோடு நம்மை பயணம் புரிய வைத்ததில் பெரும் தோல்வியைத் தான் தழுவியிருக்கிறது சமாரா.

பரத் யார் என்பது இரண்டாவது காட்சியில் தான் கூறப்பட்டது. இவர் தீவிரவாதி என்றால் அப்போ அந்த தீவிரவாதி யார் என பல கேள்விகளுக்கு சரியான விடை சொல்லாமல் சென்றது பெரும் சோதனை தான்.

ஹிமாச்சல் பிரதேசத்தின் அழகு காட்சிகளை சினு சித்தார்த் தனது கேமராவில் அழகாக படம்பிடித்து படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார்.

தீபக் வாரியரின் பின்னணி இசை கதையோடு பயணம் புரிய வைத்தது. சற்று தெளிவான திரைக்கதையை கொடுத்து படத்தை எளிதில் புரியும்படி வைத்திருந்தால் சமாரா இன்னும் கவனம் ஈர்த்திருந்திருக்கும். நாட்டுக்காக பினோஜ் செய்யும் செயல், யாரும் செய்யத் துணியாத ஒன்று. அந்த காட்சி பாராட்டும்படியாக இருந்தது. க்ளைமாக்ஸ் காட்சி அப்ளாஷ்…

சமாரா – சல்யூட்…,

Facebook Comments

Related Articles

Back to top button