
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகியுள்ளது ‘NGK’. வரும் 31 ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.
அரசியலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படம் தமிழ் திரையுலகில் எந்த படமும் செய்யாத ஒரு சாதனையை செய்துள்ளது. தென் கொரியாவில் ரிலீஸாகவிருக்கும் முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையை இந்த படம் பெற்றிருக்கிறது.
இதுவரை சர்வதேச அளவில் நல்ல மார்க்கெட் உள்ள விஜய், அஜித் போன்றோர் படங்கள் கூட தென் கொரியாவில் வெளியானது இல்லை.
தென் கொரிய தலைநகர் சியோலில் உள்ள முக்கிய திரையரங்குகளில் என்ஜிகே வெளியாக உள்ளது.
யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Facebook Comments





