Spotlightசினிமா

’சண்டகாரி’யில் விமலுக்கு ஜோடியாக ஸ்ரேயா!

பாஸ் புரொடக்‌ஷன்ஸ் கார்ப்பரேசன் & மெட்ரோ நெட் மல்டிமீடியா பட நிறுவனம் சார்பாக உருவாகும் படம் “சண்டகாரி – The Boss”.

விமல் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரேயா நடிக்கிறார். பிரபு , சத்யன், மற்றும் கே.ஆர், விஜயா, ரேகா, கிரேன் மனோகர், மகாநதி சங்கர், உமா பத்மநாபன் மற்றும் பல முன்னனி நடிக நடிகைகள் இப்படத்தில் நடிக்கின்றனர். மகதீரா படத்தில் வில்லனாக நடித்த தேவேந்தர் சிங் கில் முக்கிய வேடம் ஏற்கிறார்..

விஜய் நடித்த மதுர, பிரசாந்த நடித்த சாக்லட் ,விஜய்காந்த் நடித்த அரசாங்கம் ,வினய் நடித்த மிரட்டல் ,திரிஷா நடித்த மோகினி ஆகிய படங்களை இயக்கிய ஆர் மாதேஷ் என்பவர் தான் இப்படத்தை இயக்குகிறார்.

மலையாளத்தில் திலீப் மம்தா மோகன் தாஸ் நடித்து ஜீத்து ஜோசப் இயக்கிய மை பாஸ் என்ற படத்தை தழுவி எடுக்கப்படும் படம் இதுவாகும்.

படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது…முதல் கட்ட படப்பிடிப்பு நியூயார்க் வெனிஸ் லண்டன் போன்ற இடங்களில் நடந்து முடிந்தது… மற்றும் கொச்சின் கோவா காரைக்குடி போன்ற இடங்களிலும் தொடர்ந்து படப்பிடிப்பு நடை பெற்றுக்கொண்டு உள்ளது…

படத்தைப் பற்றி இயக்குனர் மாதேஷ் ” வித்தியாசமான ஆக்‌ஷன் காமெடி படம்.முழுக்க முழுக்க குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் வகையில் இந்தப் படம் உருவாகி வருகிறது.. பெரும் பகுதி வெளி நாடுகளில் படப் பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டு இருக்கிறது… தற்போது கேரளாவில் பரபரப்பாக படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது .. விரைவில் இந்தப் படம் திரைக்கு வர இருக்கிறது..” என்றார் இயக்குனர் R.மாதேஷ்..

Facebook Comments

Related Articles

Back to top button