
நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 24-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான புதிய போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.
லார்க் ஸ்டூடியோஸ் சார்பில் K. குமார் தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் ரா. வெங்கட் இயக்குகிறார். மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைப் பின்னணியாகக் கொண்டு, அப்பா – மகன் பாசம், குடும்ப உறவுகள் மற்றும் உணர்வுகளை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.
‘தெனாவட்டு’ படத்திற்குப் பிறகு ஜீவா மீண்டும் கிராமத்துப் பின்னணியில் நடிக்கும் படமாக ‘தகப்பன்’ அமைந்துள்ளது. இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடிக்கிறார்.
இப்படத்திற்கு மார்ஷல் ராபின்சன் இசையமைக்க, M. சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்புப் பணிகளைக் கவனிக்கிறார்.
‘தகப்பன்’ படத்தின் இசை உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும், படத்தின் சாட்டிலைட் உரிமையை ZEE தமிழ் நிறுவனமும், OTT உரிமையை ZEE5 நிறுவனமும் பெற்றுள்ளன.
குடும்பப் பாசத்தையும் மதுரை மண்ணின் மண்வாசனையையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘தகப்பன்’ திரைப்படம் டிசம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தற்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.





