
விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன் வெளியானது ‘மெர்சல்’. வசூல் ரீதியாக நல்ல ஒரு வெற்றியை கொடுத்தது இப்படம்.
பல விருதுகளையும் வாரிக் குவித்தது. தேணாண்டாள் நிறுவனம் சார்பில் இப்படத்தினை தயாரித்திருந்தார் முரளி.
இந்நிலையில் இப்படத்தினை டப்பிங் செய்து சீனாவிலும் வெளியிட படக்குழு திட்டமிட்டு அதற்கான பணிகளும் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சீனாவில் சுமார் 40,000 திரையரங்குகள் உள்ளன. இதில், 10.000 திரையரங்குகளில் இப்படத்தினை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
வரும் டிசம்பர் மாதம் 6-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது ‘மெர்சல்’.
Facebook Comments





