Spotlightவிமர்சனங்கள்

LIK – தேறுமா தேறாதா.?? விமர்சனம் இதோ !!

விக்னேஷ் சிவன் எழுத்து மற்றும் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கிரித்தி ஷெட்டி, சீமான் , எஸ் ஜே சூர்யா, யோகி பாபு , கௌரி ஜி கிஷன் , ஷாரா  , ஆனந்தராஜ் , மாளவிகா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் இந்த ”LIK”.

இந்த படத்தினை நயன்தாரா தயாரித்திருக்கிறார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

2040-ஐ காலக் கட்டத்தை மையமாகக் கொண்ட கதைக்களமாக படம் பயணப்படுகிறது. கதையின் நாயகனான பிரதீப் ரங்கநாதன் மற்றும் அவரின் தந்தையாக வரும் சீமான் இருவரும் இணைந்து, பசுமை உலகம் என்ற ஒன்றை உருவாக்கி, அலைபேசி பயன்பாட்டால் பாதிக்கப்பட்டவர்களை மாற்ற முயற்சிக்கிறார்கள். அவர்களுக்கு அங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

அந்த நேரத்தில் நாயகி க்ரீத்தியுடன் பிரதீப் ரங்கநாதனுக்கு காதல் மலர, அதனால் நாயகனே அலைபேசியைப் பயன்படுத்தும் சூழல் உருவாகிறது. பிரதீப் ரங்கநாதன் மொபைல் பயன்படுத்தும் விஷயம் சீமானுக்குத் தெரியவர பிரச்சனை ஆரம்பாகிறது.

அதுமட்டுமல்லாமல் அவர்களின் வாழ்க்கையில் ”LIK” செயலியால் ஏற்படும் பிரச்சினைகளும் அதனால் நடக்கும் சம்பவங்களுமே படத்தின் கதைக்களம்…

காதல் என்பது இரண்டு மனங்களின் உணர்வு அதை எந்தச் செயலியோ, எந்த இயந்திரமோ தீர்மானிக்க முடியாது என்பதைக் கச்சிதமாக பதிவு செய்திருக்கும் படம் தான் இந்த “LIK”.

பிரதீப் ரங்கநாதன் எப்போதும் போல அதே துள்ளலான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். அவரது எனர்ஜியே இந்த படத்திற்கு மிகப்பெரும் ப்ளஸ்ஸாக இருக்கிறது. Interval portion ரசிக்கும்படி உள்ளது. Krithi Shetty அழகாக இருக்கிறார்… ஆனா cringe காட்சிகள் கொஞ்சம் அதிகம் …

முதல் பாதி சுமாராக இருந்தாலும், இரண்டாம் பாதி சூப்பர். இந்த படத்தின் உண்மையான பாதுகாவலர்கள் எஸ் ஜே சூர்யா மற்றும் அனிருத் தான். இவர்களின் வேலைப்பாடு கொஞ்சம் அதிகமாகவே தெரிகிறது.

அனிருத்தின் பழைய பாடல்களை இப்படத்தில் பயன்படுத்தியது, படத்தினை துள்ளலாக கொண்டு செல்ல கைகொடுத்திருக்கிறது. அடுத்த வெற்றியை கொடுத்துவிட்டார் பிரதீப் ரங்கநாதன்.

க்ளைமாக்ஸ் காட்சி படத்தினை தூக்கி நிறுத்திவிட்டது. கடைசி அரை மணி நேரம், படம் அடுத்த லெவலுக்கு கொண்டு சென்று விட்டது.

அனிருத்தின் இசை படத்திற்கு மிகப்பெரும் பலம் தான். ரவி வர்மனின் ஒளிப்பதிவு கலர்புல்லாக இருந்தது. சிஜி பணிகள் படத்திற்கு பெரிதாக கைகொடுத்திருக்கிறது.

முதல் பாதி நமக்கு சற்று சலிப்பை ஏற்படுத்தினாலும், இரண்டாம் பாதியில் நல்ல ஒரு மெசேஜை கொடுத்ததற்காகவே இயக்குனரை வெகுவாக பாராட்டலாம்..

Rating : 2.75/5

Facebook Comments

Related Articles

Back to top button