Spotlightசினிமா

தெலுங்கு நடிகர் அடிவி சேஷ் நடிக்கும் “G2” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

தெலுங்கு நடிகரான அடிவி சேஷ் நடிக்கும் ‘G2’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. பான் இந்திய திரைப்படமாக தயாராகவிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்ட பார்வையும் வெளியிடப்பட்டிருக்கிறது.

‘HIT 2’ எனும் திரைப்படத்தின் மூலம் இரட்டை ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்தவர் அடிவி சேஷ். இவரது நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு ‘G2’ ( கூடாச்சாரி 2) என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. கூடாச்சாரி படத்தின் முதல் பாகம், இந்திய அளவில் நடைபெறும் திரைக்கதையாக அமைக்கப்பட்டிருந்தது. தற்போது இதன் இரண்டாவது பாகத்தின் கதை சர்வதேச அளவில் நடைபெறுவதாக உருவாக்கப்படுகிறது. இதற்கான கதையை நடிகர் அடிவி சேஷ் எழுதுகிறார்.

இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘மேஜர்’ எனும் படத்திற்கு படத்தொகுப்பாளராக பணியாற்றிய வினய் குமார் சிரிகீனீடி, இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’, ‘கார்த்திகேயா 2’, ‘மேஜர்’ போன்ற திரைப்படங்களை வழங்கிய தயாரிப்பாளர்கள் டி. ஜி. விஸ்வபிரசாத் மற்றும் அபிஷேக் அகர்வால் ஆகியோர் பீப்பிள் மீடியா ஃபேக்டரி , அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் மற்றும் ஏ. கே. என்டர்டெய்ன்மெண்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் சார்பில் இந்த படத்தை இணைந்து தயாரிக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட படக்குழுவினர், ‘ப்ரீ விஷன்’ எனப்படும் முன்னோட்ட பார்வைக்கான காணொளியையும் வெளியிட்டிருக்கிறார்கள்.

‘G2’ என பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Facebook Comments

Related Articles

Back to top button