Spotlightசினிமா

மர்மமும் சமூக அக்கறையும் இணையும் ‘ஒட்டாரம்’ – விரைவில் திரைக்கு!

எஸ்.எஸ். ஸ்க்ரீன்ஸ் சார்பில் P. சாமுவேல் தயாரிப்பில், ரா. ராமமூர்த்தி எழுதி இயக்கியுள்ள ‘ஒட்டாரம்’ திரைப்படம் விரைவில் திரைக்கு வர தயாராகி வருகிறது.

காட்வின் ஃப்ராங்க் கதையின் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், ‘யாத்திசை’ ராஜலட்சுமி, ‘லப்பர் பந்து’ டி.எஸ்.கே, ரோபோ கணேசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் தேசிய விருது பெற்ற எம்.எஸ். பாஸ்கர், தம்பி ராமையா, மூனார் ரமேஷ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

சி. சத்யா இசையமைத்துள்ள இப்படத்திற்கு எம்.எஸ். பரணி ஒளிப்பதிவு செய்ய, ஆர். சத்யநாராயணன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். விவேக் மற்றும் மோகன்ராஜன் பாடல்களை எழுதியுள்ளனர்.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மான்குத்திமேடு வனப்பகுதியில் பிரம்மாண்ட செட் அமைத்து படமாக்கப்பட்டுள்ளன. கடும் பனிப்பொழிவு மற்றும் வனவிலங்குகள் நடமாட்டத்திற்கு மத்தியில் 30 நாட்களுக்கும் மேலாக சவாலான சூழலில் படப்பிடிப்பு நடைபெற்றதாக படக்குழு தெரிவித்துள்ளது. சென்னை தண்டையார்பேட்டையிலும் சுமார் 20 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலின் வலி மற்றும் அது குறித்த விழிப்புணர்வை மையப்படுத்துவதுடன், தனிமனித சுதந்திரம் தவறாகப் பயன்படுத்தப்படுவதால் ஏற்படும் விளைவுகள், ‘Self-Doctoring’, ‘Self-Realisation’ உள்ளிட்ட கருத்துகளையும் படம் பேசுவதாக இயக்குநர் ரா. ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.

‘யார் இவர்கள்? இங்கு என்ன நடக்கிறது?’ என்ற கேள்விகளை பார்வையாளர்களுக்குள் எழுப்பும் வகையில் வித்தியாசமான திரை அனுபவமாக ‘ஒட்டாரம்’ இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

‘ஒட்டாரம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அக்டோபரில் வெளியாகவுள்ள நிலையில், பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவும் விரைவில் நடைபெறவுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button