Spotlightசினிமா

36 கோடி கொடுத்து “ஜவான்” பட ஆடியோ உரிமையை கைப்பற்றிய டி -சிரிஸ்!

யக்குநர் அட்லீ குமார் இயக்கத்தில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜவான்’ திரைப்படத்தின் ஆடியோ உரிமையை டி-சிரிஸ் நிறுவனம் 36 கோடி ரூபாய்க்கு கைப்பற்றி இருக்கிறது.

‘ஜவான்’ படத்தின் இசை உரிமையை பெற பல முன்னணி நிறுவனங்கள் போட்டியிட்டது. இதில் டி- சிரீஸ் நிறுவனம் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக தொகையை செலுத்தி இப்படத்தின் ஆடியோ உரிமையை பெற்றிருக்கிறது.

இது தொடர்பாக முன்னணி ஊடக நிறுவனம் ஒன்று வெளியிட்டிருக்கும் பதிவில், ”ஜவான் படத்தின் இசை உரிமைகளை டி- சிரீஸ் நிறுவனம் 36 கோடி ரூபாய்க்கு பெற்றிருக்கிறது.” என குறிப்பிட்டிருக்கிறது.

https://twitter.com/boworldwide/status/1674720558301290496?s=46

உணர்வுபூர்வமான ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதியன்று வெளியாகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button