Spotlightசினிமா

குடும்பங்கள் கொண்டாடும் “அரியவன்”!!

யக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் அறிமுக நடிகர் இஷான், பிரனாலி, டேனியல் பாலாஜி, சத்யன், சூப்பர்குட் சுப்ரமணி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் தான் ”அரியவன்”.

தவறான நபர்களால் சிக்கிக் கொள்ளும் பெண்களைப் பற்றிய விழிப்புணர்வு படமாக வெளிவந்த இப்படம் விமர்சன ரீதியாக அனைவரும் கொண்டாடினர்.

இந்நிலையில், திரையரங்குகளில் குடும்பமாக இப்படத்தை பார்த்து ரசித்து வருகின்றனர். குறிப்பாக பெண்கள் இந்த படத்தை பெரிதளவில் கொண்டாடுவதாகவும், நிகழ்காலத்தில் நடக்கும் பிரச்சனையை கையில் எடுத்து அதை திறம்பட இயக்கியிருக்கும் மித்ரன் ஜவஹரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

படத்தில் ஹீரோவாக நடித்திருந்த இஷான், புதுமுக நடிகராக என்ற நடிப்பு இல்லாமல் ஒரு அனுபவ நடிகரின் நடிப்பைக் கொடுத்திருப்பதாகவும் குறிப்பாக சண்டைக் காட்சியில் அதிரடியாக இருக்கிறார் என்றும் படம் பார்த்த ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

தொடர்ந்து சினிமா ரசிகர்கள் கொண்டாடும் படமாக இந்த வாரம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

Facebook Comments

Related Articles

Back to top button