Spotlightவிமர்சனங்கள்

டாப் கன்: மேவ்ரிக் விமர்சனம்

ஜோசப் கொசின்ஸ்கி இயக்க, டாம் க்ரூஸ், மைல்ஸ் டெல்லர் மற்றும் பலர் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் இந்த “டாப் கன்: மேவ்ரிக்”. டாம் க்ரூஸ் படம் என்றாலே அதிரடி ஆக்‌ஷனுக்கு எப்பவுமே பஞ்சம் இருந்ததில்லை. அவரது ஆக்‌ஷன் காட்சிகளை காணவே கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

அமெரிக்க கடற்படையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி அதிக அனுபம் கொண்டவர் நம் நாயகன் டாம் க்ரூஸ். உயரதிகாரிகளின் பேச்சை கேட்காததால் டாம் க்ரூஸ் வேறொரு தளத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்.

அங்கு எதிரிகளின் தாக்குதல் திட்டத்தை முறியடிக்கும் ஒரு ஆப்ரேஷனை நடத்தி முடிக்க டாம் க்ரூஸுக்கு ஆணை பிறப்பிக்கப்படுகிறது. அந்த ஆபரேஷனை எப்படி செய்து முடிக்க வேண்டும் என்று இளம் படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்க மட்டுமே டாம் க்ரூஸுக்கு அங்கு வரவழைக்கப்படுகிறார்.

இறுதியாக எப்படி எதிரிகளின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது. இளம் படை வீரர்களின் செயல்பாடுகள் எப்படி என்பதே படத்தின் மீதிக் கதை.

பல ஆண்டுகளாக ஆக்‌ஷனில் கொடிகட்டிப் பறக்கும் டாம் க்ரூஸ், இப்படத்திலும் தனது அதிரடியை வெளிப்படுத்தியிருக்கிறார்.ஆனால், இம்முறை தரையில் இல்லை ஆகாயத்தில்… ஒவ்வொரு காட்சியையும் தனது எக்ஸ்ப்ரஷனால் மிரட்டி எடுத்திருக்கிறார். பல காட்சிகளில் ரசிக்க வைத்திருக்கிறார் டாம் க்ரூஸ். ரசிகர்களை இப்படத்திலும் ஆச்சர்யத்தின் உச்சிக்கே கொண்டு சென்றிருக்கிறார்.

உடன் நடத்த இளம் படை வீரர்கள் அனைவரும் தனது மிரட்டலான நடிப்பை கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்கள். பல கோடிகளில் செலவு செய்து மிகவும் பிரம்மாண்டமான ஜெட் விமானங்களை கொண்டு ஒவ்வொரு காட்சியையும் மிரள வைக்கும்படி கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

இடைவேளை வரை சற்று கதை ஸ்லோவாக செல்கிறது, இடைவேளைக்குப் பிறகு ஜெட் வேகம் எடுப்பது போல், கதையும் சூடு பிடிக்க படம் பரபரப்பை கிளப்பிவிடுகிறது.

டாப் கன்: மேவ்ரிக் – ஜெட் வேகம் ..

Facebook Comments

Related Articles

Back to top button