
முத்தையா இயக்கத்தில் கார்த்தி மற்றும் இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகளான அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “விருமன்”.
இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளிவந்த குட்டிப்புலி, கொம்பன், மருது, கொடி வீரன் உள்ளிட்ட படங்கள் நல்லதொரு வரவேற்பை பெற்றது.
அடுத்ததாக வெளிவந்த தேவராட்டம், புலிகுத்தி பாண்டி உள்ளிட்ட படங்கள் மக்கள் மத்தியில் போதுமான வரவேற்பை பெறாமல் தோல்வியை தழுவியது.
இந்நிலையில், கார்த்தியோடு கைகோர்த்து “விருமன்” படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் முத்தையா.
இப்படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யா மற்றும் ஜோதிகா இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தை வரும் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். காஞ்ச பூ என்ற பாடலின் ப்ரொமோ சில தினங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்லதொரு வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
சக்தி பிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் இப்படத்தை ரிலீஸ் செய்கிறார்.





