Spotlightசினிமா

300 கோடி வசூலை நெருங்கும் “விக்ரம்”!

லகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் “விக்ரம்”.

திரைப்படம் வெளியாகி பத்து நாட்களுக்கு மேலாகியுள்ள நிலையில், பல திரையரங்குகள் இன்னமும் அரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.

வசூல் மழையை வாரிக் குவித்து வருகிறது விக்ரம். 200 கோடி ரூபாயை ஏற்கனவே கடந்து விட்ட நிலையில், 300 கோடி ரூபாய் வசூலை தற்போது நெருங்கி வருகிறது விக்ரம்.

இன்னும் ஓரிரு நாட்களில் அச்சாதனையையும் விக்ரம் நிகழ்த்திவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரம் படத்தின் அதிரிபுதிரி வெற்றியால் பல படங்கள் தங்கள் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளனர்.

இந்த வருடத்தில் வெளியான கே ஜி எஃப் 2 மற்றும் வலிமை படங்களின் தமிழ்நாடு வசூலை விக்ரம் ஓரங்கட்டி விடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button