Spotlightசினிமா

நட்புனா என்னானு தெரியுமா.? நண்பன்னா என்னானு தெரியுமா.? 17 ஆம் தேதி தியேட்டர்ல பாருங்க!

ஷேண்டோ ஸ்டுடியோ & சினிமாஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைபப்டம் தான் “பிரண்ட்ஷிப் ” .

இப்படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடித்துள்ளார். ஆக்ஷ்ன் கிங் அர்ஜுன் , லாஸ்லியா, சதிஷ் , JSK சதீஷ்குமார், வெங்கட் சுபா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வரும் வெள்ளியன்று (செப் 17) இப்படம் திரைக்கு வர இருக்கிறது. ஏற்கனவே இப்படத்தின் ட்ரெய்லர் இளம் தலைமுறையினரிடையே நல்லதொரு வரவேற்பு பெற்றுள்ளதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

மேலும், ஹர்பஜன் சிங் அவர்களுக்கு தமிழகத்தில் ஏராளமான கிரிக்கெட் ரசிகர்களும் இருப்பதால், அவரை திரையில் காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

நட்பின் வலிமையை இப்படத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று கூறுகின்றனர் இதன் இயக்குனர்கள்.

இப்படத்திற்கு ஏராளமானோர் ஆவலுடன் இருப்பதாக சமூக வலைதளங்களில் தொடந்து கூறி வருகின்றனர்.

பிரண்ட்ஷிப் திரைப்படம் இந்திய மொழிகளில் விரைவில் வெளியாக இருக்கிறது .

Facebook Comments

Related Articles

Back to top button