
நடிகர்கள்: விஜய் சேதுபதி , அபி நக்ஷத்ரா, ரிஷா ஜேகப்ஸ், பார்வதி, சிந்து , மிலிந்த் சோமன் , முத்து குமார் ,
சிங்கம்புலி, வடிவேல் முருகன், பாலாஜி சக்திவேல் , இர்ஷாத் அலி , சுதேவ் நாயர் , அரிஸ்டோ சுரேஷ்,
சுனிதா சந்திரன் ,ஆர். அமரேந்திரன், சாதனா
இயக்குநர் – எம். மணிகண்டன்
இயக்குநர் / எடிட்டர் – பி. அஜித் குமார்
ஒளிப்பதிவு (DOP) – மது என்
ஒளிப்பதிவு (DOP) – என். சண்முகசுந்தரம்
இசை – ராஜேஷ் முருகேசன்
ஒலி – அஜயன் அடாட்
கலை இயக்குநர் – ஜாக்கி
கலை இயக்குநர் – சாபு மோகன்
லோக்கல் போலீஸ் ஸ்டேஷனில் போலீஸாக இருக்கிறார் வடிவேல் முருகன். இவரது மனைவியாக வருகிறார் விஜே பார்வதி. புதிதாக இருவருக்கும் திருமணம் நடந்திருக்கிறது. ஆயிரக்கணக்கான ஆடுகளை வளர்த்து வருகின்றனர் வடிவேல் முருகன் குடும்பம்.
குற்ற வழக்குகள் எதுவும் பதியாததால், போலீஸ் ஸ்டேஷனை தூக்கிவிட, மேலிடம் உத்தரவு இட இருந்த நிலையில், விஜய் சேதுபதியின் தலையை மட்டும் வெட்டி எடுத்து பாறை ஒன்றின் மேல் வைத்துவிடுகிறார்கள்.
இந்த வழக்கு, லோக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்கு வர, சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் சிங்கம்புலி மற்றும் வடிவேல் முருகன் மூவரும் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரிக்கின்றனர். இறந்து போன நபர் யார் என்று அந்த கிராமத்தில் உள்ள எவருக்கும் தெரியவில்லை.
தலையை மட்டும் வைத்துக் கொண்டு, யார் இந்த நபர் எதற்காக இவர் கொல்லப்பட்டார் என்று தனது விசாரணையை துவக்குகிறார்கள் முத்துக்குமார் & டீம்.
இறுதியில் விஜய்சேதுபதி யார் என்று தெரிந்ததா இல்லையா என்பது இந்த தொடருக்கான விடை…
கதையின் மொத்த கருவையும் தாங்கி சுமந்திருக்கிறார் விஜய் சேதுபதி. முத்து என்ற கதாபாத்திரமாகவே தொடர் முழுவதும் வாழ்ந்துவிட்டுச் சென்றிருக்கிறார். யார் இவர் .? யாரால் கொல்லப்பட்டார் என்ற கேள்வி தொடர் முழுவதும் தொடர்ந்து கொண்டே இருந்தது தொடருக்கான பலமாக பார்க்கலாம்.
பின்னணி இசையும் ஒளிப்பதிவும் நம்மை கதைக்குள்ளே இழுத்துச் சென்று விடுகிறது. தொடரின் ஆரம்பகாட்சியிலேயே இது என்ன மாதிரியான தொடர் என்பதை காட்டிவிடுகிறது. தொடரில் நடித்த அனைத்து நடிகர்களுமே அந்த கதாபாத்திரங்களாகவே வாழ்ந்துவிட்டுச் சென்றிருக்கின்றனர்.
மொத்தமாக பத்து தொடர்கள் வரை இந்த கதையை இழுத்துச் செல்லாமல் 7 அல்லது 8 தொடர்களில் முடித்திருந்தால், இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும் என்று கூற வைத்துவிட்டார்கள்.
மிகவும் மெதுவாக நகரும் திரைக்கதை என்பதால், நம்மை சோதனைக்கு ஆளாக்கிவிடுகிறார்கள்.
சிங்கம்புலியின் காமெடி பல இடங்களில் வொர்க் அவுட் ஆகியுள்ளது. முத்துக்குமாரின் யார் இந்த முத்து என்ற கேள்விக்கான வேட்டை பரபரப்பை கொண்டு வருகிறது.
ஆரம்பத்தில் இருந்த ஒரு வேகம், தொடர் நகர நகர மெதுவானது தொடருக்கு மிகப்பெரும் சறுக்கல் தான் என்றே கூறிவிடலாம்..
இருந்தாலும்,
இணையத் தொடரை ரசிக்கும் ரசிகர்கள் அனைவருக்குமே இந்த தொடர் ஒரு கேள்வியை எழுப்பும் என்பதில் சந்தேகமில்லை..





