Spotlightசினிமா

100 கோடி வசூலை வாரிக் குவித்த டான்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

றிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி நடிக்க வெளிவந்த திரைப்படம் தான் “டான்”.

சில தினங்களுக்கு முன் இப்படம் வெளியாகி அனைத்து தரப்பு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பல திரையரங்குகளில் இன்னமும் நல்ல புக்கிங்க் கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நேற்று வரை இப்படம் சுமார் 100 கோடி வசூல் செய்துள்ளதாக படத்தினை இணைந்து தயாரித்த லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இதற்கு முன் வெளிவந்த சிவகார்த்திகேயனின் டாக்டர் படமும் 100 கோடி வசூலை ஈட்டிக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

Related Articles

Back to top button