
தமிழகத்தை போலவே மேற்கு வங்கத்திலும் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. மேற்கு வங்கத்தில் மட்டும் சுமார் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது.
மேற்கு வங்க மம்தாவின் ஆட்சியை வீழ்த்த மத்திய பாஜக அரசு பல வியூகங்களை கையாண்டு வருகிறது.
நான் “வங்கத்துப் பெண்” என்ற முழக்கத்தோடு மேற்கு வங்காளத்தில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் மம்தா.
இந்த நிலையில் நேற்று நந்திகிராம் தொகுதியில் அவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதன்பின்னர் பிருலியா என்ற இடத்தில் உள்ள கோயிலில் வழிபாடு நடத்திவிட்டு, தனது கார் அருகில் மம்தா நின்று கொண்டிருந்ததாகவும், அப்போது அங்கு வந்த ஐந்து பேர், திறந்த நிலையில் இருந்த மம்தா காரின் முன்பக்க கதவை தள்ளியதில் அவரது காலில் பலமாக அடிபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெரிவித்த மம்தா பானர்ஜி, தன்னை வேண்டுமென்றே அவர்கள் தள்ளிவிட்டதாகவும், இது திட்டமிட்ட சதி என்றும் குற்றம் சாட்டினார். மேலும், தான் கீழே தள்ளப்படும்போது காவலர்களோ, காவல் கண்காணிப்பாளரோ தனது அருகில் இல்லை என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.





