Spotlightசினிமா

இணையத்தில் கசிந்த ‘பிகில்’ பாடல்; ரசிகர்கள் அதிர்ச்சி!

ட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் படுவேகமாக வளர்ந்து வருகிறது ‘பிகில்’. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சில தினங்களுக்கு முன் வெளியாகி அனைவரிடமும் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் விஜய் தந்தை, மகன் என இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏ ஜி எஸ் நிறுவனம் இப்படத்தினை மிகப் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

ஏ ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். ஆகஸ்ட் மாதம் இப்படம் திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில்,, இப்படத்தின் பாடல் ஒன்று இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது. ‘மாதரே… மாதரே..’ என துவங்கும் அந்த பாடல் ஏ ஆர் ரகுமானின் குரலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாடல் இணையத்தில் கசிந்ததை அடுத்து படக்குழுவினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

Facebook Comments

Related Articles

Back to top button