
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்க மிக வேகமாக வளர்ந்து வருகிறது ‘பிகில்’. இப்படத்தின் டீசர் மற்றும் ஒரு பாடல் வெளியானது.
அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் ஏ ஆர் ரகுமான்.
வரும் தீபாவளி விடுமுறை தினமாக இப்படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்க உருவாகியுள்ள படம் தான் ‘கைதி’. இப்படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன் வெளியாகி பெரும் வைரலானது.
இப்படத்தினையும் தீபாவளி தின கொண்டாட்டமாக வெளிவர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில், என்னவொரு சுவாரஸ்யம் என்றால், விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 64’ படத்தினை லோகேஷ் கனகராஜ் தான் இயக்கவிருக்கிறார் என்பது தான் இதில் ஹைலைட்டான விஷயம்..
என்ன செய்வார்கள் ட்ரொல் செய்யும் தளபதி ரசிகர்கள்…
Facebook Comments





