
பாடகர், நடிகர், தயாரிப்பாளர் என பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை போன்றே அவரது மகன் எஸ்.பி.பி.சரண் அவர்களும் பன்முகம் கொண்டவர்.
தனது கேப்பிடல் பிலிம் வொர்க்ஸ் நிறுவனம் சார்பாக மழை, ஆரண்ய காண்டம், நாணயம், சென்னை 28 மற்றும் சென்னை 28- பாகம் 2 ஆகிய படங்களை எஸ்.பி.பி.சரணே தயாரித்திருக்கிறார்.
இவை அனைத்தும் வெற்றி படங்களாக அமைந்துவிட்டன.
தற்போது ஒரு வெப் சீரிஸை இயக்கவிருக்கிறாராம்.
இந்த வெப் சீரிஸை, அவரது தந்தையும்; பாடகருமான எஸ்.பி.பாலசுப்ரமணியம் தயாரிக்கிறார்.
கேபிள் சங்கர் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள இந்த வெப் சீரிஸிற்கு, தீனா தேவராஜன் இசையமைத்துள்ளார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
Singer SP Balasubramaniam and his son Charan team up for Web series
Facebook Comments





